மத்திய அமைச்சரவையில் தி.மு.க.? பரபரப்பு
21 ஆவணி 2026 வெள்ளி 07:08 | பார்வைகள் : 196
மத்திய அமைச்சரவை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின்போது தி.மு.க.வும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போது 29 மந்திரிகளும், 39 இணை மந்திரிகளும் உள்ளனர். சமீபத்தில் 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தி.மு.க.வும் இடம்பெறுகிறதா?
இதேவேளை, 20-க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் முக்கியமாக, மாற்றியமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநில ஊடகங்கள், விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதற்கு, தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., தற்போது சில நிபந்தனைகளுடன் அதற்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதை காரணமாக சுட்டிக்காட்டுகின்றன.
'இந்தியா' கூட்டணியில் இல்லை
"பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை" என்று தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. இதுவரை காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, தேசிய அளவிலான கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் பலத்தைப் பொறுத்தவரை, மக்களவையில் 22 பேரும், மாநிலங்களவையில் 8 பேரும் உள்ளனர். எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தேவையாக உள்ளது.
கனிமொழி எம்.பி. பங்கேற்பு
இதன் அடிப்படையிலேயே பா.ஜ.க.வும், தி.மு.க.வும் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனை அடிப்படையாக வைத்தே, மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெறப்போவதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாக தெரிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire