Paristamil Navigation Paristamil advert login

தொகுதி மறுவரையறை: தவெக நிலைப்பாட்டில் மாற்றமில்லை

தொகுதி மறுவரையறை: தவெக நிலைப்பாட்டில் மாற்றமில்லை

21 ஆவணி 2026 வெள்ளி 08:09 | பார்வைகள் : 172


தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், “மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

**நிலைப்பாடு மாற்றம் என விமர்சனம்**

543 எம்.பி.க்கள் என்ற எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் தற்போது மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:-

“ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மின்சாரத் தேவை இருந்தது. நம்முடைய நிலங்கள் அதிகளவில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

**கவுன்சிலில் விவாதிக்கவில்லை**

அடுத்த கூட்டத்தை தெலுங்கானாவில் நடத்தலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக-வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் இதைத் திரித்து பேச வேண்டாம்.

காவிரி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்சினையாகும். எனவே, அது குறித்து இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் 39 எம்.பி.க்கள் தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தென் மாநிலங்களைத்தான் தொகுதி மறுவரையறை பாதிக்கும்” என்றார்.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2