நாட்டின் வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் முக்கியம்: அமித்ஷா
21 ஆவணி 2026 வெள்ளி 09:13 | பார்வைகள் : 179
“தேசத்தின் வளர்ச்சிக்கு தென் மாநிலங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
அதிக கல்வியறிவு, பயிற்சி பெற்ற மனிதவளம் மற்றும் ஆழ்கடல்களைப் பயன்படுத்துவதில் உள்ள தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையிலேயே தென் மாநிலங்களின் வளர்ச்சிப் பயணம் அமைந்துள்ளது. இந்த மூன்று தூண்கள்தான் தென் மாநிலங்களை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக உருவாக்கியுள்ளன.
புத்தாக்கம் மற்றும் வருவாய் உருவாக்கம் ஆகிய துறைகளில் தென் மாநில மக்களும், அரசுகளும் புதிய பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இரு துறைகளிலும் தென் மாநிலங்களிடம் இருந்து நாடு கற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை. இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தொழில்துறை வளர்ச்சி, விவசாயம் என ஒவ்வொரு துறையிலும் தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.
நாட்டின் தகவல் தொழில்நுட்பம், வாகனங்கள், மருந்துத் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தென் மாநிலங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. இதன் காரணமாக தென் மாநிலங்களில் அதிகளவில் அந்நிய முதலீடு குவிந்துள்ளது.
வட மாநிலங்களில் நிலவிய நதிநீர் பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், தென் மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகளும் புதிய அணுகுமுறையில் தீர்க்கப்படும்.
ஜல்சக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில குழுக்கள் கூட்டாக பேசி தீர்வு காண்பது அவசியம். மாநிலங்களை பாதுகாப்பதில் தவறு இல்லை. ஆனால், பிற மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டுக்கு தடையாக இருப்பது உகந்ததல்ல.
பிரம்மபுத்ரா, காவிரி, கோதாவரி ஆகிய நதிகள் இணைக்கப்பட்டால் இந்தியாவில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு நீர் ஆதாரம் முக்கியமானதாக உள்ளது.
போதையில்லாத பாரதத்தை உருவாக்குவது மாநில அரசுகள் மற்றும் சமூகத்தின் கடமை. போதையில்லாத பாரதத்திற்காக மத்திய அரசு மூன்று ஆண்டு திட்ட வரைபடத்தை தயாரித்துள்ளது. அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் போதையில்லாத பாரதத்தை உருவாக்க முடியாது.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire