Paristamil Navigation Paristamil advert login

நீதி கிடைப்பதை எளிதாக்கும் பாஜக அரசு: அமித்ஷா

நீதி கிடைப்பதை எளிதாக்கும் பாஜக அரசு: அமித்ஷா

21 ஆவணி 2026 வெள்ளி 10:16 | பார்வைகள் : 178


நீதி கிடைப்பதை எளிதாக்கும் வகையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் மூலம், லடாக்கில் உயர் நீதிமன்றக் கிளை அமைய உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றக் கிளை அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான சட்ட சேவைகளைப் பெறுவதற்காக செலவிடும் நேரம் குறையும்.

மேலும், அவர்கள் நீதித்துறை சேவைகளை அணுகுவது கணிசமாக மேம்படும்.

லடாக்கின் முழுமையான வளர்ச்சிக்கும், அங்கு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2