Paristamil Navigation Paristamil advert login

தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு: மரிய வில்சன்

தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு: மரிய வில்சன்

21 ஆவணி 2026 வெள்ளி 11:19 | பார்வைகள் : 157


தாமிரபரணி ஆற்றைப் பாதுகாப்பது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினை என்பதால், கடந்த கால ஆட்சியாளர்களால் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினைக்கு தற்போதைய அரசு உரிய திட்டங்களை செயல்படுத்தி விரைவில் நிரந்தரத் தீர்வு காணும் என நிதியமைச்சர் மரிய வில்சன் உறுதி அளித்துள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டசபை எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தற்போது முதல்-அமைச்சர் இதனை அறிவித்துள்ளதால், சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும்.

மேலும், சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு சட்டசபை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டே முதல்-அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அரசு மேற்கொள்ளவுள்ள நிதிச் சீர்திருத்தங்களை நீங்களே காண்பீர்கள். நிதிச் சீர்திருத்தங்கள் மற்றும் ஜிடிபி குறித்த விவரங்களை சட்டசபையிலேயே நான் தெளிவாக விளக்கியுள்ளேன். முதல் காலாண்டில் கடன்-ஜிடிபி விகிதத்தைக் குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளும் தெளிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாமிரபரணி பாதுகாப்புத் திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகளை நீர்வளத்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது.

மேலும், என்னை இந்த மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் முதல்-அமைச்சர் நியமித்துள்ளார். தாமிரபரணி ஆற்றைப் பாதுகாப்பது நீண்ட காலப் பிரச்சினையாக இருப்பதால், கடந்த கால ஆட்சியாளர்களால் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினைக்கு தற்போதைய அரசு உரிய திட்டங்கள் மூலம் விரைவில் நிரந்தரத் தீர்வை வழங்கும்.

இவ்வாறு மரிய வில்சன் கூறினார்.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2