Paristamil Navigation Paristamil advert login

ரூ.16.20 கோடிக்கு ஏலம் போன மஹாத்மா காந்தியின் கையெழுத்து பிரதி

ரூ.16.20 கோடிக்கு ஏலம் போன மஹாத்மா காந்தியின் கையெழுத்து பிரதி

21 ஆவணி 2026 வெள்ளி 12:25 | பார்வைகள் : 159


மகாத்மா காந்தி எழுதிய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ரூ.16.20 கோடிக்கு ஏலம் போனது. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஆனந்த் டி. ஹிங்கோரனி, மகாத்மா காந்தியின் சீடராகவும் இருந்தார். ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்த பிறகு, அவருக்கு ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல் அளிக்கும் வகையில் மகாத்மா காந்தி தினமும் கடிதம் எழுதினார்.

உண்மை, அஹிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மகாத்மா காந்தி மொத்தம் 688 கடிதங்களை எழுதியிருந்தார். இந்தக் கடிதப் பரிமாற்றம் 23 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

பின்னர், இந்தக் கடிதங்கள் அனைத்தும் ''A Thought for the Day'' என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் திருப்புமுனையான தருணங்களை மட்டுமின்றி, மகாத்மா காந்திக்கும் ஹிங்கோரனிக்கும் இடையிலான நட்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆழ்ந்த தனிப்பட்ட உரையாடல்களையும் இந்தத் தொகுப்பு ஆவணப்படுத்துகிறது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள சப்ரோன்ஆர்ட் ஏல மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்தியின் கையெழுத்துப் பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம் போனது.

''காந்தி: ஆனந்த் டி. ஹிங்கோரனியின் சேகரிப்பில் இருந்து'' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஏலத்தில், மகாத்மா காந்தி தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2