Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இணையத் தாக்குதல்: மருத்துவத் தளத்தில் மில்லியன் கணக்கான தரவுகள் கசிவு!!

மீண்டும் இணையத் தாக்குதல்: மருத்துவத் தளத்தில் மில்லியன் கணக்கான தரவுகள் கசிவு!!

21 ஆவணி 2026 வெள்ளி 07:21 | பார்வைகள் : 392


மருத்துவர்களின் சந்திப்பு நேரங்களை நிர்வகிக்கும் தனியார் மின்னணு சுகாதாரத் தளமான Alaxione மீது இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Patrick Attaiech தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு ஹேக்கர் ஒருவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், சுமார் 6 மில்லியன் மருத்துவப் பதிவுகள் திருடப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

திருடப்பட்டதாகக் கூறப்படும் தரவுகளில் சமூகப் பாதுகாப்பு (Sécurité sociale) எண்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைக்கான காரணங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வார தொடக்கத்தில் இணையத் தாக்குதல் குறித்து Alaxione நிறுவனத்துக்கு எச்சரிக்கை கிடைத்ததுடன், அதன் சேவையகங்களில் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திருடப்பட்ட தரவுகளை மீண்டும் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஹேக்கர் இணைப்பு ஒன்றை அனுப்பியதாகவும், ஆனால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதனை நிராகரித்ததாகவும்  தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்தத் தரவுகளை 4,000 யூரோக்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப் போவதாக ஹேக்கர் அறிவித்துள்ளார்.

எனினும், தாக்குதலுக்குள்ளான சேவையகம் வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட சேவையகம் என்றும், அதில் உண்மையான வாடிக்கையாளர்களின் தரவுகள் இல்லாமல் சோதனைத் தரவுகள் மட்டுமே இருந்ததாகவும் Alaxione நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உண்மையில் எவ்வளவு தரவுகள் திருடப்பட்டுள்ளன என்பதை கண்டறிய, சிறப்பு வழக்கறிஞர் மற்றும் இணையத் தாக்குதல் பாதுகாப்பு நிபுணரை நிறுவனம் நியமித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் வரித்துறை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இணையத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2