பாகிஸ்தானில் வந்திறங்கிய சீனா மற்றும் துருக்கியின் ராணுவ விமானங்கள்
21 ஆவணி 2026 வெள்ளி 11:19 | பார்வைகள் : 187
சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக ராணுவ விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத் தளங்களில் சீனா மற்றும் துருக்கியைச் சேர்ந்த கனரக ராணுவ விமானங்கள் சமீபத்தில் தரையிறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தானுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாகிஸ்தான் சீனாவை பெரிதும் நம்பி வருகிறது.
இதனிடையே, போர் விமான மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கியும் பாகிஸ்தானும் சமீபத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
மேலும், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமும் அண்மையில் கையெழுத்தானது.
இத்தகைய சூழலில், சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கியிருப்பது பிராந்திய ராணுவ நிலவரம் குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமானங்களில் உண்மையில் என்ன வகையான தளவாடங்கள் கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire