Paristamil Navigation Paristamil advert login

அரசு கார்களை பெறமாட்டோம்: உதயநிதி

அரசு கார்களை பெறமாட்டோம்: உதயநிதி

21 ஆவணி 2026 வெள்ளி 14:59 | பார்வைகள் : 252


தி.மு.க.வை சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்கள் அரசு வழங்கும் கார்களை பெறமாட்டார்கள் என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிவித்தார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது:-

“ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் புதிய வாகனம் வழங்குவதாக இந்த அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜயே கூறி வருகிறார்.

எனவே, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தி.மு.க.வை சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்கள் அரசு வழங்கும் கார்களை பெறமாட்டோம்.

அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில், எம்.எல்.ஏ.க்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பின் கீழ் வாகனங்கள் வழங்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.”

இவ்வாறு உதயநிதி பேசினார்.

எல்லோரும் சமம்!

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆதவ் கூறியதாவது:-

“முதல்வரின் நோக்கம், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல; இதே சட்டசபையில் ஏழ்மையாக இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள் என்பதுதான். அவையில் அனைவரும் சமம் என்று நினைக்கக்கூடியவர் முதல்வர் விஜய்.

எங்களது பொதுச்செயலாளரிடம் கார் இருக்கிறது. நாங்கள் வந்து கேட்கப் போவதில்லை. ஏழ்மையாக இருப்பவர்கள் விண்ணப்பம் கொடுப்பார்கள். தமிழக வெற்றிக்கழகத்தில் யாரிடம் கார் இருக்கிறதோ, அவர்கள் கார் கேட்கப்போவதில்லை.

அரசுத்துறை பங்களா

அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு இரண்டு, மூன்று வீடுகள் இருக்கின்றன. ஆனால் அவர் அரசு பங்களாவில் இருக்கிறாரே? 'எனக்கு அரசு துறை பங்களா வேண்டும்' என்று என்னிடம் தான் கடிதம் கொடுத்தார்.

'உங்களுக்கு இரண்டு, மூன்று பங்களாக்கள் இருக்கின்றன. அதனால் அரசு தர முடியாது' என்று கேட்க முடியுமா, சொல்ல முடியுமா? அவரது கோரிக்கையை கொடுத்த உடனேயே, உடனடியாக வழங்கிவிடுவோம் என்று கூறினோம். அமைச்சர்களுக்கு கார், வீடு வழங்கப்படுகிறது.

ஆடம்பரம் கிடையாது

அமைச்சர்களுக்கு நான்கு உதவியாளர்கள் வழங்கப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு உதவியாளர்கள் கிடையாது. எம்.எல்.ஏ.க்களுக்கு வீடும் கிடையாது. தவெக மட்டுமல்ல; அனைத்து கட்சிகளிலும் வீடு இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

கார் என்பது ஆடம்பரம் கிடையாது; மக்களை சந்திப்பதற்கு அது தேவை. ஊழல் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தேவை. மக்களை சந்திக்க அவர்கள் செல்ல வேண்டும்.”

இவ்வாறு ஆதவ் கூறினார்.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2