தமிழகத்துக்காகவே மேகதாது அணை: சிவக்குமார்
21 ஆவணி 2026 வெள்ளி 15:02 | பார்வைகள் : 267
“தமிழகத்துக்காகவே மேகதாது அணை; கர்நாடகாவுக்காக அல்ல” என கர்நாடக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியதாவது:-
“தண்ணீரை விட முக்கியமான வளம் எதுவும் இல்லை. தண்ணீர் நம்மை ஒருங்கிணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது. மேகதாது அணைத் திட்டம் கர்நாடகாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் முக்கியமானது.
இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு துளி தண்ணீரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு உதவும் என நான் உறுதி அளிக்கிறேன். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எங்களுக்கு உதவுங்கள்” என்றார்.
**பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-**
தென்மண்டல குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து தென் மாநிலங்களின் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தோம்.
1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதே நிலையில் இருக்க வேண்டும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்தோம்.
இந்த விவகாரத்தில் தமிழகம், கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் உள்ளன.
மேலும், நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக தனியாக ஒரு கூட்டத்தை நடத்தி, சுமுகமான தீர்வுகளை காண கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேகதாது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப்பட்டதைத் தவிர, மீதமுள்ள தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும்.
தமிழகத்துக்காகவே மேகதாது அணை; கர்நாடகாவுக்காக அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire