Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் சுதந்திர தினம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிரவுள்ள ஈபிள் கோபுரம்!!

உக்ரைன் சுதந்திர தினம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிரவுள்ள ஈபிள் கோபுரம்!!

21 ஆவணி 2026 வெள்ளி 14:47 | பார்வைகள் : 267


 உக்ரைன் சுதந்திரம் அறிவிக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பரிஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை  இரவு உக்ரைன் தேசியக் கொடியின் நிறங்களான நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிரவுள்ளது. இரவு 9.30 மணிக்கு ஈபிள் கோபுரம் உக்ரைன் கொடியின் நிறங்களில் ஒளிரும் என பரிஸ் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வு Paris 16ஆம் வட்டாரத்தில் உள்ள Trocadéro Esplanade-இன் Parvis des Droits-de-l’Homme பகுதியில் நடைபெறவுள்ளது. இரவு 9.15 மணிக்கு பரிஸ் நகர மேயர் Emmanuel Grégoire மற்றும் பிரான்ஸுக்கான உக்ரைன் தூதுவர் Vadym Omelchenko ஆகியோர் உரையாற்றவுள்ளனர். உக்ரைன் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் தங்களது உறுதியான ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமையும் என பரிஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உக்ரைன் சிறுவர் பாடகர் குழுவான «Zerniatko» பல பாடல்களைப் பாடவுள்ளது. அதன் பின்னர் இரவு 9.30 மணிக்கு “இரும்புப் பெண்மணி” என அழைக்கப்படும் ஈபிள் கோபுரம் உக்ரைன் தேசியக் கொடியின் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிரும். உக்ரைன் தனது சுதந்திரத்தின் 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், அந்நாட்டில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதை தலைநகரின் மையத்திலிருந்து நினைவூட்டும் அடையாளமாகவும் இந்த ஒளியூட்டல் அமையவுள்ளது.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2