சாய் அபயங்கரின் ‘ரதிமா’ ஆல்பத்தில் இணைந்த பிரபல நடிகை

சாய் அபயங்கரின் ‘ரதிமா’ ஆல்பத்தில் இணைந்த பிரபல நடிகை

21 ஆவணி 2026 வெள்ளி 16:24 | பார்வைகள் : 579


சாய் அபயங்கரின் தனி இசை பாடலான ‘ரதிமா’ பாடலில் பிரபல நடிகை பாக்ய ஸ்ரீ போஸ் இணைந்துள்ளார். இந்தப் பாடல் வரும் 24-ம் தேதி வெளியாகிறது.இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது தனியிசை ஆல்பம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. அண்மையில் அவர் வெளியிட்ட ‘பவளமல்லி’ ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.இதில் சாய் அபயங்கருடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் பாடியிருந்தார். மேலும் வீடியோவில் கயாடு லோஹரின் நடனம் ரசிகர்களை ஈர்த்தது. இந்தப் பாடல் யூடியூப்பில் 28 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை அள்ளியது.

இந்நிலையில், சாய் அபயங்கரின் 6-வது ஆல்பம் பாடல் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரதிமா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போஸ் இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடனமாடி பாடல்களை வெளியிட்டு வரும் சாய் அபயங்கர் இம்முறை பாக்யஸ்ரீ போஸை தேர்வு செய்துள்ளார். இவர் தெலுங்கில் சில படங்கள் நடித்தாலும், தமிழில் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படிக்க