Paristamil Navigation Paristamil advert login

கார் வாங்கும் வேகத்தை விவசாயிகளுக்கான நிதியிலும் காட்ட வேண்டும்: உதயநிதி

கார் வாங்கும் வேகத்தை விவசாயிகளுக்கான நிதியிலும் காட்ட வேண்டும்: உதயநிதி

22 ஆவணி 2026 சனி 06:54 | பார்வைகள் : 195


எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்குவதில் அரசு காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் காட்டியிருக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அதன் பயன் இன்னும் விவசாயிகளைச் சென்றடையாதது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. இதனால், விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசியிருந்தேன்.

வறட்சி நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியது குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனால், அவர் நிதி ஒதுக்கியதாக கூறியிருந்தபோதிலும், அந்த நிதியும் இதுவரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல் விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கிறதா?

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனமாக செயல்படுவது ஏற்புடையதல்ல.

குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளைச் சென்றடைய, இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3