ஆர்.எஸ்.எஸ்.க்கு தடை கோரிக்கை: இந்தியா கண்டனம்
22 ஆவணி 2026 சனி 09:19 | பார்வைகள் : 170
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வரும் 29-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்ல உள்ளார். இந்த நிலையில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ் ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது அமெரிக்காவில் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அவர்களின் கருத்துகள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“இந்திய பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு பல துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. அந்த துணை அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
தற்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளார். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் அமைப்பின் வன்முறைச் செயல்களில் இருந்து பகவத்தின் வருகையை தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது.
எனவே, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு உயர்மட்ட சந்திப்புகள் அல்லது ராஜதந்திர மரியாதைகள் மூலம் கவுரவம் அளிக்கக்கூடாது.
அதற்கு பதிலாக, மத நம்பிக்கை சுதந்திரம் மீறல்களுக்குப் பொறுப்பானவர்களாக கண்டறியப்படும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது தடை விதிப்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
**இந்தியா கடும் கண்டனம்**
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத சுதந்திர ஆணையம் ஒரு “பாரபட்சமான அமைப்பு; அதற்கு நம்பகத்தன்மை இல்லை” என்று இந்தியா விமர்சித்துள்ளது.
இந்த அமைப்பு இந்தியாவின் மத சுதந்திர நிலை குறித்து தொடர்ந்து தவறான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை முன்வைத்து வருவதாகவும், அதன் மதிப்பீடுகள் சந்தேகத்திற்குரிய ஆதாரங்கள் மற்றும் குறிப்பிட்ட கருத்தியல் அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் இந்தியா ஏற்கனவே தெரிவித்திருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire