விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: மோடி
22 ஆவணி 2026 சனி 11:26 | பார்வைகள் : 180
விண்வெளித் துறையில் இந்தியா அதிக சாதனைகளை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் 20 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது, விவசாயம், கால்நடை மேலாண்மை, பால்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுக்கு விண்வெளித் தொழில்நுட்பம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராயுமாறு இந்தியாவின் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், தொழில்முனைவோரையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவின் விண்வெளித் துறையில், சவால்கள் நிறைந்த ஒரு புதிய துறையில் துணிச்சலுடன் களமிறங்கியுள்ள இளம் தொழில்முனைவோர்களை சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. அவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளை நம்பி, தங்களது முயற்சிகளில் தளராத உறுதியுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்தியா பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளதுடன், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கண்டுள்ளது.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது பணிகள் குறித்த பயனுள்ள விளக்கங்களை அளித்தனர். விண்வெளித் துறையில் அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளையும், அந்தச் சீர்திருத்தங்கள் தங்களது வளர்ச்சிக்கு எவ்வாறு ஊக்கமளித்தன என்பதையும் அவர்கள் பாராட்டினர்.
எதிர்காலத்திற்கான இந்தியாவின் திறன்களை வளர்த்தெடுக்கும் இவர்களின் பயணத்தில் மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன்.
விண்வெளித் துறையில் புதுமையான மற்றும் வணிக ரீதியாக புதிய படைப்புகளை உலகிற்கு வழங்க இந்தியா வல்லமை பெற்றுள்ளது.”
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire