நாட்டு எல்லை பாதுகாப்பில் அமித் ஷா உறுதி
22 ஆவணி 2026 சனி 12:29 | பார்வைகள் : 165
எல்லை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால்தான் நாட்டின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:-
“இந்தியா-வங்காளதேச எல்லையில் வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை பி.எஸ்.எப். அமைப்புக்கு வழங்குமாறு மம்தா பானர்ஜியிடம் பலமுறை தீவிரமாக கோரிக்கை விடுத்தும், அது செவிமடுக்கப்படவில்லை. எல்லைகள் பாதுகாக்கப்படுவதில்தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தபோதும், இந்தியா-வங்காளதேச எல்லையில் வேலி அமைக்க தேவையான நிலத்தை முந்தைய முதல்வர் மம்தா பானர்ஜி வழங்கவில்லை. எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 2014-ம் ஆண்டு முதல் நான் கோரி வந்த 1,129 ஏக்கர் நிலம், தற்போது முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகே கிடைத்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காத முந்தைய அரசுகளின் செயல்பாடு குறித்து நான் வருத்தமடைந்தேன். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பாடப்படும் வரை, ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவம் இந்தியாவில் ஒருபோதும் பாடப்படவில்லை.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இப்பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேசம் இறுதியாக இதற்கு உரிய அங்கீகாரம் அளித்திருப்பது எனக்கு ஆறுதல் அளிக்கிறது.”
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire