வந்தே மாதரத்தை காங்கிரஸ் எதிர்ப்பது துரதிர்ஷ்டவசம்: ராஜ்நாத் சிங்
22 ஆவணி 2026 சனி 13:33 | பார்வைகள் : 180
வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக எதிர்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய மரியாதை அளிக்க மறுப்பதுடன், அதனை வெளிப்படையாக எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இது அரசியலமைப்பு ரீதியாக கவலைக்குரிய விவகாரம். இந்திய அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றமே நாட்டின் உயர்ந்த அமைப்பாகும். நாடாளுமன்றம் இயற்றும் எந்தவொரு சட்டமும் ஒவ்வொரு தனிநபருக்கும் கட்டுப்பட்டதாகும்.
இதனை ஏற்க யாரேனும் மறுத்தால், அரசியலமைப்பின் மீதான அவர்களின் விசுவாசம் கேள்விக்குறியாகிறது. அதேபோல், தேசியப் பாடலை மதிக்க மறுப்பது ஒருவரின் தேசபக்தி குறித்தும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸ் குறிப்பிடும் 1937-ம் ஆண்டு தீர்மானமானது, முஸ்லிம் லீக்கின் தீவிரமான கோரிக்கைகளுக்கு அக்கட்சி பணிந்த பின்னரே நிறைவேற்றப்பட்டது. இதற்கான விலையை நாடு பிரிவினையின் மூலம் சந்திக்க நேரிட்டது. சமரசம் செய்து கொள்வது நாட்டுக்கு எப்போதும் பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காங்கிரஸ் மீண்டும் அதுபோன்ற சக்திகளுக்கு பணிந்து செல்வது, நாட்டின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸின் இந்த முடிவு முற்றிலும் அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் கண்டிக்கத்தக்கது என்று நான் கருதுகிறேன். இது எதிர்காலத்தில் தீவிரமான அரசியல் நெருக்கடியையும் உருவாக்கக்கூடும்.
‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்ப்பதன் மூலம் காங்கிரஸ் தனது தவறான நோக்கங்களை நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire