சுவிஸ் உணவகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!
21 ஆவணி 2026 வெள்ளி 18:31 | பார்வைகள் : 245
சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை மாயமாகியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் துசிஸ்(Thusis) நகரில் உள்ள உணவகம் மற்றும் அதன் மேல் தளத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 5 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும், 8 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் உள்ளூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 14 பேர் வரை இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து உயிர் தப்பிய நிலையில் இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இது தொடர்பாக அவசர உதவி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்க களமிறக்கப்பட்டனர்.
தீயை முழுமையாக கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன 5 பேரின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire