ஜெர்மனியில் திடீரென மாறிய வானிலை
21 ஆவணி 2026 வெள்ளி 19:37 | பார்வைகள் : 402
ஜெர்மனியில் அடித்த புயலில் இருவர் பலியாகியுள்ளார்கள்.
நேற்று வரை வெப்பத்தால் தவித்த சில நாடுகளில் மழை கொட்டித் தீர்க்கத் துவங்கியுள்ளது.
பிரித்தானியாவில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஜேர்மனியிலும் இரண்டு நாட்களாக புயலடித்துவரும் நிலையில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.
மேற்கு ஜேர்மனியிலுள்ள Rhineland-Palatinate மாகாணத்தில், இரண்டு பெண்கள் வாக்கிங் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென புயலடிக்கத் துவங்க, அவர்கள் மழைக்காக ஓரிடத்தில் ஒதுங்க, அப்போது மரம் ஒன்று சாய, அந்தப் பெண்களில் ஒருவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். மற்றொரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும், புயலால் பல இடங்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.
பவேரியாவில் விழா ஒன்றிற்காக சுமார் 3,500 பேர் மைதானம் ஒன்றில் கூடியிருந்த நிலையில், புயல் காரணமாக அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
Thuringia மாகாணத்தில், ஒரு தந்தை தன் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கும்போது மரம் ஒன்று உடைந்து விழ, அந்த தந்தை உயிரிழந்துவிட்டார், குழந்தை தப்பிவிட்டது.
ஆக, வெப்பத்தால் மக்கள் தவித்த நிலை மழையால் மாறினாலும், பல இடங்களில் கட்டிடங்களுக்கும் சில இடங்களில் மக்கள் உயிருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire