ஒரே மாதத்தில் ரூ.12,000 கோடி கடன்: தமிழக அரசு
22 ஆவணி 2026 சனி 14:02 | பார்வைகள் : 158
தமிழக அரசு, கடன் பத்திரங்கள் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளின் மூலம், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.12,044 கோடி கடன் பெற்றுள்ளது.
தமிழக அரசுக்கு வரி மற்றும் வரி அல்லாத பல்வேறு வழிகளில் வருவாய் கிடைக்கிறது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், நிலம் விற்பனை, விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி, மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரி பகிர்வு, இதர வரிகள் மற்றும் தீர்வை ஆகியவற்றின் மூலம் வரி வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மத்திய அரசின் மானியம் உள்ளிட்ட வகைகளில் வரி அல்லாத வருவாயும் கிடைக்கிறது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.89,718 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், வரி விதிப்புகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.82,566 கோடியாகவும், வரி அல்லாத வருவாய் ரூ.4,070 கோடியாகவும், மத்திய அரசின் மானியம் ரூ.3,082 கோடியாகவும் உள்ளது.
இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவு ரூ.1.23 லட்சம் கோடியாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.25,267 கோடியாக உள்ளது.
மொத்த செலவில் அதிகபட்சமாக, ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்தப்பட்ட வட்டி ரூ.21,176 கோடியாகவும், ஓய்வூதிய செலவு ரூ.17,237 கோடியாகவும் உள்ளது.
வருவாயை விட செலவு அதிகமாக இருப்பதால், பல்வேறு திட்டங்களுக்கான செலவுகளை மேற்கொள்ள அரசு கடன் பெறுகிறது. இதற்காக கடன் பத்திரங்கள் வெளியிடுவதுடன், பல்வேறு வங்கிகளிடமிருந்தும் கடன் பெறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் தமிழக அரசு பெற்ற கடன் ரூ.32,925 கோடியாக உள்ளது. ஜூன் மாத நிலவரப்படி இது ரூ.20,881 கோடியாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.12,044 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.
கடந்த 2025-26-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.85,876 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் பெறப்பட்ட கடன் ரூ.30,956 கோடியாக இருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire