ஒரு பைசாவில் தங்க மோதிரம்: 2 நிறுவனங்கள் டெண்டர்
22 ஆவணி 2026 சனி 15:03 | பார்வைகள் : 182
தமிழக அரசின் ‘தாய்மாமன்’ தங்க மோதிர திட்டத்துக்கான டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான 22 காரட் தங்கத்தை அரசு வழங்கும்.
அந்த தங்கத்தை பயன்படுத்தி மோதிரங்களை தயாரித்து வழங்குவதற்காக, பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜூலை 17-ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது.
இன்று திறக்கப்பட்ட இந்த டெண்டரில் 11 முன்னணி தங்க விற்பனை நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், தங்கத்தின் விலையைத் தவிர செய்கூலி, ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்து, ஒரு மோதிரம் தயாரிப்பதற்கான செலவு வெறும் ஒரு காசு மட்டுமே என ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
தமிழக ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி, பிற 10 நிறுவனங்களிடமும் குறைந்த விலைப்புள்ளி வழங்கிய நிறுவனத்தின் விலைக்கு இசைவு தெரிவிக்குமாறு கோரப்பட்டது. இதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்தது.
இதன் அடிப்படையில், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவீதமும் என டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முதல் நான்கு மாதங்களுக்கு 1,28,499 தங்க மோதிரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
**மற்ற நிறுவனங்கள் கோரிய தொகை**
டெண்டரில் பங்கேற்ற ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் ரூ.410.97, உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் ரூ.822.97, டைட்டன் கம்பெனி ரூ.832.24, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் ரூ.871.38, எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி ரூ.947.60, கே.டி.எம். ஜூவல்லரி ரூ.964.08, மோகன்லால் ஜூவல்லர்ஸ் ரூ.977.47, கல்யாண் ஜுவல்லர்ஸ் ரூ.978.50, ஜவரி அண்ட் கம்பெனி ரூ.1,325.61, சரவணா ஸ்டோர்ஸ் ஜூவல்லரி ரூ.15,356.27 என கோரியிருந்தன.
அரசு வெளியிட்ட டெண்டர் நிபந்தனைகளின்படி, தங்க மோதிரம் 12.4 மி.மீ. விட்டத்தில், கூர்மையான பகுதிகள் இல்லாமல் தயாரிக்கப்பட வேண்டும். அதில் பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை மற்றும் என்.யு.ஐ.டி. எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேலும், மோதிரத்தை ‘பிளிஸ்டர் கார்டு’ மூலம் பேக் செய்து, அரசின் முத்திரையுடன் விநியோகிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire