நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக துருக்கி பிடியாணை நடவடிக்கை
22 ஆவணி 2026 சனி 09:23 | பார்வைகள் : 206
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரும் நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது.
காஸா நோக்கிப் பயணித்த மனிதாபிமான உதவி கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
துருக்கி நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய அதிகாரி அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோருக்கு எதிராக கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் சர்வதேச ரீதியில் தேடும் வகையில் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற Global Sumud Flotilla எனப்படும் கப்பல் தொடரணி சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 35 பேர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
நெதன்யாகு மற்றும் மோஸ்கோவிச் மீது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை மற்றும் சட்டவிரோதமாக சுதந்திரத்தைப் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதற்காக புறப்பட்ட கப்பல் தொடரணியை இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை விமர்சித்துள்ள நெதன்யாகுவின் அலுவலகம், இந்த நடவடிக்கை இஸ்ரேலிய தலைமையை அச்சுறுத்தும் முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்டர்போல் ரெட் நோட்டீஸ் என்பது ஒருவரை உலகளாவிய ரீதியில் கைது செய்வதற்கான தன்னிச்சையான சர்வதேச பிடியாணை அல்ல.
மாறாக, குறித்த நபரை கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்யுமாறு உறுப்பு நாடுகளின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோரும் அறிவிப்பாகும். ரெட் நோட்டீஸ் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்டர்போல் தனித்தனியாக பரிசீலனை செய்யும்.
காஸா போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், நெதன்யாகுவுக்கு எதிரான இந்த புதிய சட்ட நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire