Paristamil Navigation Paristamil advert login

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - 16 பேர் உயிரிழப்பு

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - 16 பேர் உயிரிழப்பு

22 ஆவணி 2026 சனி 12:04 | பார்வைகள் : 332


உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை உக்ரைனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ்(Kryvyi Rih) நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 22 பேர் குழந்தைகள் என அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகள் உட்பட 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் அவசர கால மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3