காதலி குறித்து மனந்திறந்த ஜேசன் சஞ்சய் !

காதலி குறித்து  மனந்திறந்த ஜேசன் சஞ்சய் !

22 ஆவணி 2026 சனி 16:13 | பார்வைகள் : 737


நடிகர் மற்றும் தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குனராகிவிட்டார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நேற்று ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்.

தனக்கு பெண் தோழி என யாரும் இல்லை என கூறிய அவரிடம் எதிர்காலத்தில் உங்களுக்கு ஒரு பெண் தோழி அல்லது காதலி இருந்தால் அவர் எப்படி இருக்கவேண்டும் என உங்களுக்குள் ஏதேனும் ஆசை இருக்கிறதா?. இருக்க வேண்டும் (Green Flags) என 3 விஷயங்களும், இருக்கக் கூடாது (Red Flags) என 3 விஷயங்களையும் சொல்லுங்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு ‘எனக்கு நல்லா சாப்பிட பிடிக்கும். அந்த பெண்ணுக்கும் சாப்பிடுவதில் ஆர்வம் இருக்க வேண்டும்.. அட்வென்சரை விரும்ப வேண்டும்.. ஒரு ஆணை நம்பியிருக்காமல் சொந்த காலில் சம்பாதிக்க வேண்டும். அது பெண்களுக்கு மிகவும் அவசியம் என கூறினார்.

அதேபோல் ‘Heavy Maintenance இருக்கக் கூடாது.. தமிழ் படங்கள் பார்த்திருக்க வேண்டும். தமிழ பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும். ஏனெனில், நாம் பேசும்போது பார்த்த படங்கள் மற்றும் பாடல்கள் பற்றி பேசுவோம். அது அந்த பெண்ணுக்கு தெரியவில்லை என்றால் வைப் இருக்காது.. நான் எப்படிப்பட்டவன்.. எனக்கான Priority என்னவென அவருக்கு புரியவேண்டும். மற்றவர்களுக்காக நம்மை மாற்றுக்கொள்வது தவறு’ என ஜேசன் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படிக்க