பேரரசர்களை ஜாதி, மதத்துடன் தொடர்புபடுத்தக்கூடாது: ராம்நாத் கோவிந்த்
23 ஆவணி 2026 ஞாயிறு 06:19 | பார்வைகள் : 183
“எந்தவொரு பேரரசரும் மதம், ஜாதி, இனம் மற்றும் மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர்,” என்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அங்கு பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மாபெரும் மன்னருக்கு அஞ்சலி செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். எந்தவொரு பேரரசரும் மதம், ஜாதி, இனம் மற்றும் மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர். எனவே, அவர்களை குறிப்பிட்ட மதம், ஜாதி, இனம் அல்லது மொழியுடன் யாரும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது.
அந்த மன்னர்களின் ஆசியால்தான் நான் ஐந்து ஆண்டுகள் ஜனாதிபதியாக பணியாற்ற முடிந்தது என கருதுகிறேன். இதற்கான பெருமை தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் சாரும். அதற்காக நான் எப்போதும் நன்றி உணர்வுடன் இருக்கிறேன்.
எந்த ஒரு அரசாங்கத்தைப் பற்றியும் கருத்து தெரிவிப்பதற்காக நான் இங்கு வரவில்லை.”
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.
திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire