மோடியின் 25 ஆண்டு அரசுப் பணி: இருவார சேவை நிகழ்ச்சிகள்
23 ஆவணி 2026 ஞாயிறு 07:20 | பார்வைகள் : 157
பிரதமர் மோடி அரசு பதவியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, செப்., 17 முதல் நாடு முழுவதும் இரு வார கால சேவை நிகழ்ச்சிகளை நடத்த பாஜ தலைமை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற மோடி, 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்தார். அதன்பின், 2014ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2026ம் ஆண்டு வரை சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுப் பதவியில் இருந்து வருகிறார்.
தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசுப் பதவியில் பிரதமர் மோடி ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில், செப்., 17 முதல் நாடு தழுவிய அளவில் இரு வார சேவை நிகழ்ச்சிகளை நடத்த பாஜ தலைமை முடிவு செய்துள்ளது.
டில்லியில் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் தேசிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேவை நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணிகள், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த, பாஜ தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அமைச்சர், அமைப்புப் பொதுச் செயலாளர் மற்றும் 5 மூத்த தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழு புகைப்படம்
கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, டில்லியில் உள்ள பாஜ தேசிய தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரை தேசிய தலைவர் நிதின் நபின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர், புதிய தேசிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire