Paristamil Navigation Paristamil advert login

சிக்கன்ஸ் நெக் எல்லைப்பாதுகாப்பு; அமித் ஷா முக்கிய ஆலோசனை

சிக்கன்ஸ் நெக் எல்லைப்பாதுகாப்பு; அமித் ஷா முக்கிய ஆலோசனை

23 ஆவணி 2026 ஞாயிறு 08:26 | பார்வைகள் : 158


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி காரிடார் பகுதியில் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய நிலப்பகுதி, சிக்கன்ஸ் நெக் எனப்படும் சிலிகுரி காரிடார் ஆகும். இதன் எல்லைப் பகுதியில் வங்கதேசமும், சீனாவும் தீஸ்தா நதி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளன. இது இந்தியாவின் எல்லையோர பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த சூழலில், சிக்கன்ஸ் நெக் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியும் பங்கேற்றார். கூட்டத்தில், சீனா மற்றும் வங்கதேசத்தின் நேரடி அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

முன்னதாக, நேற்று சிலிகுரியில் ராணுவ வீரர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா படா கானா நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்களுடன் உணவருந்தினார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3