Paristamil Navigation Paristamil advert login

ஜாதி வாரி இடஒதுக்கீட்டுக்கு எதிராக டில்லியில் போராட்டம்

ஜாதி வாரி இடஒதுக்கீட்டுக்கு எதிராக டில்லியில் போராட்டம்

23 ஆவணி 2026 ஞாயிறு 09:29 | பார்வைகள் : 165


டில்லியில் ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜந்தர் மந்தரில் நேற்று நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இடஒதுக்கீட்டு மறுசீரமைப்பு இயக்கத்தின் தலைவர் ஹர்ஷ் துபே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெனரல் சேனா, சாணக்கிய சேனா மற்றும் கர்னி சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது, ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

“பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கட்டணச் சலுகைகள் உள்ளிட்ட உதவிகள் சென்றடைய வேண்டும். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, சமூகம் மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைநகர் டில்லியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3