Paristamil Navigation Paristamil advert login

சென்னை நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து

23 ஆவணி 2026 ஞாயிறு 13:59 | பார்வைகள் : 155


சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை இன்று (சனிக்கிழமை) கொண்டாடி வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சென்னை நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“வரலாற்றின் தடங்களைச் சுமந்தபடியும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்தும் தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய ‘சென்னை நாள்’ நல்வாழ்த்துகள்.

வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும் கொண்ட சென்னையில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதுடன், பல்வேறு மொழி, இனம் மற்றும் பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.

சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்.

அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.

வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!”

இவ்வாறு அந்தப் பதிவில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3