"பட்ஜெட்டை தாமதிப்பது குழப்பத்தை உருவாக்கும்” – பிரதமர் Sébastien Lecornu அதிரடி எச்சரிக்கை!!
23 ஆவணி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 382
2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு–செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது அவசியம் என பிரதமர் Sébastien Lecornu நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். சுமார் நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தக் கடிதத்தில், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதை தாமதிப்பது நாட்டில் “குழப்பத்தை” ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். பிரெஞ்சு மக்கள் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுக்கும் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் செயல்படுவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற விவாதம் தொடங்குவதற்கு முன்பே அரசியலமைப்புச் சட்டத்தின் 49.3 பிரிவைப் பயன்படுத்துவது அல்லது அரசாணைகள் மூலம் சட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை Sébastien Lecornu விமர்சித்துள்ளார். “இன்னும் தொடங்காத விவாதத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இப்போதே தீர்மானிப்பது நியாயமானதோ விரும்பத்தக்கதோ அல்ல” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் எந்த நடவடிக்கையையும் அவசரமாக மேற்கொள்ள மாட்டோம்” எனக் கூறியுள்ள அவர், வரவு–செலவுத் திட்ட விவாதத்திற்கு தேவையான நேரத்தை வழங்கி, பல்வேறு கருத்துக்களை எதிர்கொண்டு, சமரசத்தைத் தேடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவை செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்ற கீழவையான Assemblée nationale-ல் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த ஆண்டு பொதுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாகக் குறைப்பது குறித்து Sébastien Lecornu பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2026ஆம் ஆண்டுக்கான 5.0 சதவீத இலக்கிற்கு நெருக்கமானதாகும்.
மாணவர்களுக்கான APL வீட்டு உதவித்தொகையை நீக்குவது உள்ளிட்ட சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்களையும் பிரதமர் ஏற்கனவே மறுத்திருந்தார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்னும் தயாரிப்பு நிலையில் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire