Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் கோர சம்பவம்! இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மரணம்

பிரித்தானியாவில் கோர சம்பவம்! இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மரணம்

23 ஆவணி 2026 ஞாயிறு 07:49 | பார்வைகள் : 220


காவல்துறையின் துரத்தல் மற்றும் எதிர் திசையில் வாகனம் மோதிய விபத்தில் 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் மரணமடைந்தனர்.

மிட்ல்ஸ்பரோ (Middlesbrough) அருகே A66 சாலையில், துரத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து காவல் துறை வாகனமும் வோக்ஸ்வேகன் பாசாட் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.

மிட்ல்ஸ்பரோவிற்கு அருகிலுள்ள சவுத் பேங்க் பகுதியில், ஒரு காவல்துறை வாகனத்திற்கும், தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் வாகனத்திற்கும் இடையே விபத்து ஏற்பட்டதாக கிளீவ்லேண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்து அதிகாலை 3.40 மணிக்கு மிட்ல்ஸ்பரோ அருகே உள்ள சவுத் பேங்கிற்கு அவசர சேவைப் பிரிவினர் விரைந்தனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இரண்டு வாகனங்களிலும் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

இன்று காலை நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்த இரண்டு காவலர்கள், 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளீவ்லேண்ட் காவல் துறைத் தலைவர் விக்டோரியா ஃபுல்லர் இன்று மதியம் தெரிவித்தார்.

காவல்துறை வாகனம் சரியான திசையில் சென்று கொண்டிருந்ததாகவும், அதில் பணியில் இருந்த இரண்டு அதிகாரிகள் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகத்தால் அந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்து துரத்தத் தொடங்கியதாகவும், பின்னர் அந்த வாகனம் A66 சாலைக்குச் சென்று காவல் துறை வாகனம் ஒன்றின் மீது மோதியதாகவும் நம்பப்படுவதாக IOPC தெரிவித்துள்ளது.

நார்மன்பி சாலைக்கும் சர்ச் லேனுக்கும் இடைப்பட்ட பகுதியில் A66 சாலை சிறிது காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்று கிளீவ்லேண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரமான விபத்து ஒன்றில் இரண்டு காவலர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் மரணமடைந்த செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, A66 சாலையில் ஏழு பேர் மரணமடைந்த விபத்து மிகவும் துயரமானது என்று உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறியுள்ளார்.

 

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3