Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா முழுவதும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களில் பலர் பலி

ரஷ்யா முழுவதும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களில் பலர் பலி

23 ஆவணி 2026 ஞாயிறு 09:58 | பார்வைகள் : 211


உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவில் பலர் பலியானதாக தெரிய வந்துள்ளது.

ரஷ்யா முழுவதும் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் பலர் பலியானதாகவும், ஓசோன் கிடங்கு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா முழுவதும் உக்ரைன் இரவுநேர ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும், சில்லறை விற்பனையாளரான ஓசோனுக்கு சொந்தமான ஒரு கிடங்கையும், சமாரா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையையும் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து சமாரா பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் ஃபெடோரிஷ்சேவ் கூறும்போது, உக்ரைனின் தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர் என்றார்.

அத்துடன் ஓசோன் வெளியிட்ட அறிக்கையில், சாபாயேவ்ஸ்க் நகரில் உள்ள தனது சமாரா பிராந்திய தளவாட மையத்தில், தாக்குதலுக்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியது.

அதேபோல் பெல்கோரோட் பிராந்தியத்தில், உக்ரேனியத் தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதற்கிடையில், 457 உக்ரேனிய ட்ரோன் விமானங்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3