ஜெர்மனியில் புதிய கலாச்சார மோதல்
23 ஆவணி 2026 ஞாயிறு 11:03 | பார்வைகள் : 205
ஜெர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள அரசியல், ஒரு சூடான தேசிய விவாதமாக மாற வழிவகுத்துள்ளது.
ஜெர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள பரபரப்பான சூழல், பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றிய சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத்தில் உள்ள பெண்களுக்கான பிரத்யேக குளத்தை பயன்படுத்துவது தொடர்பாக, நீச்சல் குளங்கள் குறித்த கலாச்சாரப் போர் திருநங்கை சமூகத்திற்கும், பாலினத்தை விமர்சிக்கும் பெண்களுக்கும் இடையே மோதலாக இருந்தது.
அந்த வகையில் தற்போது ஜேர்மனியிலும் நீச்சல் குளங்கள் சார்ந்த சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றியதாக இருக்கிறது.
2026-ஆம் ஆண்டின் கடும் வெப்பம் நிறைந்த கோடைக்காலத்தில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க திறந்தவெளி நீச்சல் குளங்களை நோக்கி ஜேர்மனி மக்கள் பெருமளவில் படையெடுத்தனர்.
வெப்பநிலை உயர்ந்த அதே வேளையில், பதற்றமும் உச்சத்தை எட்டியது. அதற்கு காரணம் கறுப்பின சமூகத்தினர் தொடர்பிலான அறிவிப்புதான்.
பெர்லினின் புகழ்பெற்ற வோல்க்ஸ்புனே திரையரங்கின் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக திறந்தவெளி நீச்சல் குளம், கோடை காலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆனால், கடந்த வாரம் ஒருநாள் மட்டும் 'கறுப்பின சமூகத்தினருக்கு மட்டுமே பிரத்யேகமாக திறந்திருக்கும்' என்று அறிவித்து, சிறுபான்மை இனத்தவரின் பங்கேற்பை அதிகரிக்க அதன் நிர்வாகிகள் முடிவு செய்தபோது, அதன் விளைவுகள் பெரும் வெடிப்பை ஏற்படுத்தின.
இது ஒரு சூடான தேசிய விவாதமாக வெடிக்க வழிவகுக்க இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கட்டுப்பாட்டிற்காக ஒரு கடுமையான போரில் ஈடுபட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire