தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கலா? காங்கிரஸ் கேள்வி
24 ஆவணி 2026 திங்கள் 06:14 | பார்வைகள் : 154
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி, கடந்த 13-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தொடரின் நிறைவு நாளில், பாராளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 10 நாட்கள் கடந்தும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படவில்லை.
தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே பாராளுமன்ற கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக முடித்து வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கேள்வி
பாராளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:-
“தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஒரு சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆதரவு தேடி வருகிறாரா?
மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதற்கும், அது அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படுவதற்கும் இடையிலான கால இடைவெளி பொதுவாக 2 முதல் 4 நாட்கள் வரை இருக்கும்.
ஆனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும், அது அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டது குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire