இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
24 ஆவணி 2026 திங்கள் 07:16 | பார்வைகள் : 159
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், டெல்லியில் உள்ள ஷா அரங்கிற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அண்மைக்காலமாக கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் போலவே, ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த ‘இடஒதுக்கீட்டு மறுசீரமைப்பு’ என்ற இயக்கம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷா அரங்கில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக போலீசாரிடம் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவின.
இதனால், இளைஞர்கள் மீண்டும் ஒன்றுகூடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், ஷா அரங்கிற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆனால், ஷா அரங்கில் போராட்டம் நடத்துவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி டிசிபி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
“இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக ஜந்தர் மந்தரில் இன்று ஒன்றுகூடுமாறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுபோன்ற போராட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை. 144 தடை உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. இதுபோன்ற பதிவுகளை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான தகவல்களை யாரும் பகிர வேண்டாம்.
மீறி பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire