Paristamil Navigation Paristamil advert login

பாஜ கட்டுப்பாட்டில் திமுக; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

பாஜ கட்டுப்பாட்டில் திமுக; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

24 ஆவணி 2026 திங்கள் 08:28 | பார்வைகள் : 152


பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் தி.மு.க. உள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் அவர் மேலும் கூறியதாவது:

“‘இண்டி’ கூட்டணியில் எம்.பி.க்களை கொண்டுள்ள கட்சிகளையே சேர்க்க முடியும். எங்களுக்கு எம்.பி.க்கள் வந்தவுடன் இணைந்து செயல்படுவோம்.

பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் எதிர்க்கட்சிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்று கூறுகின்றன. ரூ.30 கோடி, ரூ.40 கோடி செலவு செய்து எம்.எல்.ஏ.வாக வந்துள்ளனர்.

அவர்களுக்கு 10 கார்கள், 15 தொழில்கள் இருக்கும். ரூ.1,000 கோடி சொத்து இருக்கும். ஆனால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை.

இதற்கு முன்பு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்? சொந்த தொகுதியிலேயே ஒரு கிராமத்திற்குகூட செல்லாத எம்.எல்.ஏ. 5 அல்லது 10 ஆண்டுகள் பதவியில் இருந்தால் என்ன பயன்?

அ.தி.மு.க. இல்லையென்றால் தி.மு.க. என்ற நிலை இருந்தது. தற்போது விஜய் முதல்-அமைச்சரானவுடன் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளனர்.

தி.மு.க. ஏற்கனவே பா.ஜ.க.வுடன் சென்றுவிட்டது. தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. வாக்களிக்கப் போகிறார்களா, இல்லையா?”

இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்