இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைப்பதா? ராகுலுக்கு வி.எச்.பி. கண்டனம்!
24 ஆவணி 2026 திங்கள் 09:31 | பார்வைகள் : 154
மனுஸ்மிருதியில் இடம்பெற்றுள்ள கருத்தை திரித்துக் கூறி, இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவர்கள் மத்தியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
“பெண்கள் குழந்தைப் பருவத்தில் தந்தையையும், இளமையில் கணவரையும், முதுமையில் மகன்களையும் சார்ந்திருக்க வேண்டும் என்று மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல; அவர்களுக்கே உரியவர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் கருத்து வெட்கக்கேடானது.”
இந்நிலையில், இதுகுறித்து வி.எச்.பி. தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:
“மனுஸ்மிருதியின் ஒரு சுலோகத்தை மட்டும் தேர்வு செய்து, அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளாமல் இந்து சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது ராகுலுக்கு எளிதாகிவிட்டது.
தூய்மையான எண்ணத்துடன் வாழும் நாட்டின் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கக்கூடாது. மனுஸ்மிருதியை விமர்சிக்கும் ராகுல், பெண்கள் குறித்து குரான், பைபிள் போன்ற பிற மத நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும் பொது வெளியில் மேற்கோள் காட்டிப் பேசுவாரா? அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா?
பெண் சக்தி என்பது நமது நாகரிகத்தின் அடையாளம். மனுஸ்மிருதிக்கும், அரசியல் சாசனத்துக்கும் இடையிலான மோதலாக இதை ராகுல் மாற்ற முயற்சிக்கிறார். இதன் மூலம் நமது வரலாறு மற்றும் கலாசாரத்திற்கு பெரும் அநீதியை இழைக்கிறார்.
ராகுல் முதலில் மனுஸ்மிருதியை முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகே இந்து சமூகத்திற்கு சான்றிதழ் வழங்கும் வேலையை செய்ய வேண்டும்.”
இவ்வாறு வினோத் பன்சால் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire