Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர்களை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ.: அடுத்த கைது இவரா?

அமைச்சர்களை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ.: அடுத்த கைது இவரா?

24 ஆவணி 2026 திங்கள் 10:35 | பார்வைகள் : 160


திருவையாறு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரசேகரன், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி கலந்து கொண்டார்.

அப்போது, விழா மேடையில் உதயநிதி இருந்த நிலையில், மணமக்களை வாழ்த்தி திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது:

“தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘திரிஷா வாழ்க’ என்று கத்தினார். அப்போது உதயநிதி பேசும்போது, காவிரியில் தண்ணீர் இல்லை என்று தெரிவித்தார். இதை தொடர்புபடுத்தி ஒரு வழக்கு போட்டனர். கைது செய்து செங்கிப்பட்டிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார்.

மறுநாள் சட்டசபைக்கு முதல்வர் விஜய் வந்து கும்பிட்டார். ஆனால், அன்று கும்பிடக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். அவரை விடக்கூடாது என்று நாங்கள் யாரும் கும்பிடவில்லை. ஆளு மூடவுட் ஆகிவிட்டார். இருவரும் ஒன்றுமே தெரியாதது போல் சென்றனர்.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக உதயநிதி இவ்வளவு கஷ்டங்களை ஏற்றுக்கொண்டார். அவரை போய் என்ன செய்யப்போகிறான், கைது எல்லாம் பண்ணான். சட்டசபையில் நிர்மல்குமார் என்ன செய்தான்? ‘கரூர் கம்பெனி’ என்றான். பின்னர், ‘ஐயோ சாரி, சாரி, கரூர் முன்னாள் அமைச்சர்’ என்றான்.

உடனே உதயநிதி, ‘சங்கி அமைச்சர்... இல்லை, சாரி சாரி, சட்ட அமைச்சர் அவர்களே’ என்று கூற, அவன் தலையை ஆட்டினான். வெளுத்து வாங்கிவிட்டார்.

நான் சும்மா பேசும்போது ‘மாமா’ என்றுதான் சொன்னேன். அவர்கள் நான் ‘பொட்டு மாமா’ என்று சொல்லப்போகிறேன் என்று நினைத்துவிட்டார்கள். அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது, அதற்கு ஜி.ஓ. இருக்கிறதா என்று துணை சபாநாயகர் கூறினார்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம், டி.ஆர்.பி. ராஜா, மகேஷ் இல்லாததுதான். கீர்த்தினா என்ற ஒரு அமைச்சர் படுத்தும் பாடு பெரிய பாடாக இருக்கிறது. சத்தியமாக கடுப்பு என்றால் கடுப்பு. வேறு வழியே இல்லை. நாம் செய்ததை நாங்கள் செய்ததாக அவர் சொல்கிறார். நம்முடைய சாதனைகள் அனைத்தையும் அவருடைய சாதனைகளாக எடுத்துக்கொள்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன்... ஐயய்யோ சாமி, நம்மளால் எல்லாம் தாங்க முடியவில்லை. அவ்வளவு டயலாக் விடுகிறார், பார்த்துக்கொள்ளுங்கள்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம். ரஜினி வாசகம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘தப்பு பண்ணிட்டியே சிங்காரம், தப்பு பண்ணிட்டியேனு.’ தளபதியை என்னைக்கு கை வைத்தானோ, அன்றிலிருந்து தி.மு.க. மிகவும் எழுச்சியாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய், பெண் அமைச்சர் கீர்த்தினா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் மற்றும் சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோரை எம்.எல்.ஏ. சந்திரசேகரன் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்