உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு: 80 சாலைகள் மூடல்
24 ஆவணி 2026 திங்கள் 11:40 | பார்வைகள் : 158
உத்தரகாண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 80-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து நீடித்து வருவதால், பல்வேறு சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. முசௌரி-டேராடூன் சாலையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், அதிகாரிகள் வாகனங்களை கிமாடி சாலை வழியாக திருப்பிவிட்டனர். பின்னர், சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, இலகுரக வாகனங்களை மட்டும் அந்த வழியாக செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
நிலச்சரிவு காரணமாக உத்தர்காசி மாவட்டத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. மாநிலம் முழுவதும் நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் டேராடூன், டெஹ்ரி, பித்ரோகர்க், நைனிடால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre sur un terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre sur un terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire