எல்லைப் பேச்சுவார்த்தை: சீனா செல்கிறார் அஜித் தோவல்
24 ஆவணி 2026 திங்கள் 12:44 | பார்வைகள் : 167
எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க, இந்தியா-சீனா இடையிலான சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங் செல்ல உள்ளார்.
இந்தியாவும் சீனாவும் 3,488 கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. எல்லையில் நீடித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 2003-ம் ஆண்டு முதல் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் சார்பில் சிறப்பு பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் வாங் யீ சிறப்பு பிரதிநிதியாக உள்ளார்.
இதற்கிடையில், 2020-ம் ஆண்டு லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா-சீனா உறவு மோசமடைந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், சிறப்பு பிரதிநிதிகள், ராணுவ தளபதிகள் மற்றும் இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு ஆகியவற்றின் வாயிலாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், எல்லைப் பிரச்னை தொடர்பாக 25-வது சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை (ஆக. 24) பீஜிங் செல்ல உள்ளார். அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire