தவெக இந்தியா கூட்டணியில் இருக்கிறதா? மாணிக்கம் தாகூர் பதில்
24 ஆவணி 2026 திங்கள் 14:56 | பார்வைகள் : 130
சென்னையில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
“தவெக இந்தியா கூட்டணியில் இருக்கிறதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எப்போது தவெகவுக்கு எம்.பி.க்கள் கிடைக்கிறார்களோ, அப்போது அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ள சொல்வோம். எம்.பி.க்கள் இல்லாதவர்களை கூட்டணியில் இணைய வருமாறு எங்களால் அழைக்க முடியாது. தற்போது அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடையாது. எம்.பி.க்கள் இருந்தால் இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.
சட்டசபை தேர்தலில் தவெக 106 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற பிறகு, விஜய் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டது ராகுல் காந்தியைத்தான். அவர் முதல்-அமைச்சராவதற்கு ராகுல் காந்தியிடம் தான் ஆதரவு கேட்டார்.
தவெகவுக்கு முதல் ஆதரவு கடிதத்தை வழங்கியதும் காங்கிரஸ் கட்சிதான். எனவே, தவெகவின் தற்போதைய அமைச்சர்கள் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும். அவர்கள் அமைச்சர்களாவதற்கு முதலில் காங்கிரசின் ஆதரவுதான் கிடைத்தது.
இல்லையென்றால், மத்திய மந்திரி அமித்ஷா தவெகவின் கதையையே முடித்திருப்பார். இந்த நேரத்தில் கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கி இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த நிலை அனைவருக்கும் புரியும்.
முதலில் தேர்தல் வரட்டும். விஜய் எப்போதும் குறைவாகவே பேசுவார். தேர்தல் வரட்டும். பேச வேண்டிய நேரத்தில் அவர் சரியாக பேசுவார்.”
இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire