Paristamil Navigation Paristamil advert login

இடியுடன் கூடிய மழை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

இடியுடன் கூடிய மழை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

24 ஆவணி 2026 திங்கள் 07:32 | பார்வைகள் : 335


தெற்குப் பகுதிகளில் இன்று, ஆகஸ்ட் 24 திங்கட்கிழமை, கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 16 மாவட்டங்களுக்கு Météo France செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை நிகழ்வு சில இடங்களில் மிகவும் தீவிரமாக இருக்கக்கூடும். 

மதியத்திற்குப் பிறகு தென்மேற்கு பிரான்சின் பெரும்பகுதிகளில் வலுவான இடியுடன் கூடிய மழை உருவாகி, பின்னர் மத்திய மலைப்பகுதி மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்கட்கிழமை அதிகாலையும் சில பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், 20 முதல் 40 மல்லி மீட்டர் வரை மழை பதிவானது. 

Allier (03), Aveyron (12), Bouches-du-Rhône (13), Cantal (15), Corrèze (19), Dordogne (24), Gard (30), Haute-Garonne (31), Gers (32), Hérault (34), Lot (46), Lot-et-Garonne (47), Puy-de-Dôme (63), Tarn (81), Tarn-et-Garonne (82) மற்றும் Var (83) ஆகிய 16 மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையில் உள்ளன. உள்ளூர் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வரை, சில இடங்களில் 120 கிலோ மீட்டர் வரை உயரக்கூடும். 

img_6a8bd76b9d472.png

மேலும் ஆலங்கட்டி மழை, மிகத் தீவிரமான மழைப்பொழிவு மற்றும் அதிகமான மின்னல் செயல்பாடும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுழற்காற்று போன்ற நிகழ்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது. தற்போது 58 மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பின்னர் எச்சரிக்கை நிலை உயர்த்தப்படலாம் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்