ரவி மோகன் அரசியலுக்கு வருகிறாரா ?

ரவி மோகன் அரசியலுக்கு வருகிறாரா ?

24 ஆவணி 2026 திங்கள் 13:52 | பார்வைகள் : 359


நடிகர் விஜய் மற்றும் தனுஷைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் அரசியலுக்கு வருவது தொடர்பாக பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரவி மோகன் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது "ரசிகர்களின் ஒரு சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. இனி வரும் காலங்களில் கட்டாயமாக ரசிகர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். வருகின்ற 25-ம் தேதி தனது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்" என்று பேசின

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், "தனி ஒருவன் 2 படம் எல்லோரும் எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதை பணி முடிவடைய உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது." என்றார்.

அப்போது ரவி மோகனிடம் அரசியலுக்கு வருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நல்லது செய்ய வேண்டுமென்றால் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். வந்து செய்யலாம் வராமலும் செய்யலாம். நல்லது செய்ய விருப்பம் உள்ளவர்கள் அரசியலுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்." என்று ரவிமோகன் கூறினார்.

மேலும், கராத்தே பாபு என்ற படம் மிக விரைவில் திரைக்கு வர உள்ளதாகவும் இனிவரும் காலங்களில் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளதாகவும் ரவி மோகன் தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க