ரஜினியின் சுயசரிதை பற்றி மனம் திறந்த சௌந்தர்யா!

ரஜினியின்  சுயசரிதை பற்றி மனம் திறந்த சௌந்தர்யா!

24 ஆவணி 2026 திங்கள் 14:03 | பார்வைகள் : 282


பெங்களூரில் பேருந்து நடத்துனதாக வேலை செய்து, சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து, திரைப்பட கல்லூரியில் படித்து, இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது, அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் சின்ன வேடத்தில் நடிக்க தொடங்கி, பல படங்களிலும் 2வது கதாநாயகனாக நடித்து, ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி, அதன்பின் சூப்பர்ஸ்டாராக மாறியவர் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது ரஜினிக்கு 75 வயதாகி விட்டாலும் இப்போதும் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு தற்போது அஸ்வத் மாரிமுது இயக்கத்தில் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரஜினி தனது சுயசரிதையும் எழுதி வருகிறார்..

இந்நிலையில், ரஜினியின் சுயசரிதை பற்றி கருத்து தெரிவித்த அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘அப்பாவின் சுயசரிதை எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் நானும் பங்கெடுத்து வருகிறேன்.. இந்த சுயசரிதை வெறும் திரையுலக வெற்றிகளை மட்டும் பேசாமல் அப்பாவின் ஒழுக்கம், எளிமை மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போன்ற வாழ்க்கை தத்துவங்களையும் உலகறியச் செய்யும். உலகளாவிய அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து படிக்க