நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு தடை!
24 ஆவணி 2026 திங்கள் 14:38 | பார்வைகள் : 159
நியூஸிலாந்தின் பழமைவாதக் கூட்டணி அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில், புதிய மசோதா ஒன்றை திங்கட்கிழமை 24.08.2026 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. People
மேலும், இந்த விதியை மீறும் சமூக ஊடக தளங்களுக்கு, அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயனர்களின் கணக்குத் தகவல்கள், முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பயனர்களின் வயதை உறுதிப்படுத்த சமூக ஊடக தளங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.
நியூஸிலாந்து சிறுவர்களின் ஒரு தலைமுறைக்கு ஏற்படும் பாதிப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் அவர்களை ஆபத்தான தகவல்கள், அடிமையாக்கும் தொழில்நுட்பம் மற்றும் அவர்களால் கையாள முடியாத மன அழுத்தங்களுக்கு ஆளாக்குகின்றன. இது அவர்களின் குடும்ப வாழ்க்கை, மன ஆரோக்கியம், தூக்கம் மற்றும் கல்வியைப் பாதிக்கிறது என்றும் லக்ஸன் கூறினார்.
இருப்பினும், லக்ஸனின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான 'நியூஸிலாந்து ஃபர்ஸ்ட்' (New Zealand First) கட்சி இதற்கு ஆதரவளிக்காது எனத் தெரிவித்துள்ளதால், இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறப் போதிய ஆதரவு கிடைக்குமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம் குறித்தும், இத்தகைய சட்டங்கள் தவிர்க்க முடியாமல் நமது நாட்டை இட்டுச் செல்லும் தவறான பாதை குறித்தும் நாங்கள் கவலையடைந்துள்ளோம் என்று நியூஸிலாந்தின் வெளியுறவு அமைச்சரும் 'நியூஸிலாந்து ஃபர்ஸ்ட்' கட்சியின் தலைவருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகப் பயன்பாடுகளைத் தடை செய்து, உலகிலேயே இத்தகைய தடையை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா அறியப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் அந்தச் சட்டமூலம் ஒரு "மாபெரும் தோல்வி" என்று குறிப்பிட்ட பீட்டர்ஸ், சிறுவர்களை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வைப்பது பெற்றோரின் பொறுப்பாக இருக்கவேண்டும் என்றும் மேலும் கூறினார்.
ஒவ்வொரு சிறுவர்களையும் சமூக ஊடகங்களிலிருந்து முழுமையாக வெளியே கொண்டுவர முடியாது. சிலர் எப்படியாவது விதியை மீற வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் முயற்சி செய்யாமல் விட்டுவிட முடியாத அளவுக்கு இது மிக முக்கியமான ஒரு விஷயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire