Paristamil Navigation Paristamil advert login

லூசியானாவில் அரிய வகை மூளை தின்னும் அமீபா! 8 வயது சிறுமி பலி

லூசியானாவில்  அரிய வகை மூளை தின்னும் அமீபா! 8 வயது சிறுமி பலி

24 ஆவணி 2026 திங்கள் 15:21 | பார்வைகள் : 128


அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் ரஸ்டன்(Ruston) பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி லில்லியன் ஸ்மார்ட்(Lillian Smart) க்ளெய்போர்ன் ஏரியில்(Lake Claiborne) நீராடிய போது அரிய வகை மூளைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

லில்லியன் ஸ்மார்ட் தன்னுடைய 8வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே(ஆகஸ்ட் 22ம் திகதி) சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த துயர செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளனர்.

மருத்துவர்களின் தீவிரமான சிகிச்சைக்கு பிறகும் மூளையில் ஏற்பட்ட தீவிரமான பாதிப்பு காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக குடும்பத்தினர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ம் திகதி 8 வயது சிறுமியான லில்லியன் ஸ்மார்ட்டின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 19ம் திகதி லூசியானா சுகாதாரத்துறை, மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு நெக்லேரியா பவுலேரி(Naegleria fowleri) தொற்று பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.

மேலும் கிளைபோர்ன் பாரிஷில் உள்ள க்ளெய்போர்ன் ஏரியில் நீந்திய போது இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் அந்த பாதிக்கப்பட்டவர் 8 வயது சிறுமியான லில்லியன் தான் என்று அவரது குடும்ப நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்