சுமார் 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்- 11 பேர் கைது!!
24 ஆவணி 2026 திங்கள் 17:06 | பார்வைகள் : 456
Île-de-France பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொண்ட பாரிய ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Val-de-Marne பிராந்திய பாதுகாப்புப் பிரிவு, Préfecture de Police-இன் பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து திங்கட்கிழமை 24ஆம் திகதி நடத்திய இந்த அதிரடி நடவடிக்கையில், சுமார் 100 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் 94 கிலோ கஞ்சா பிசின், 2 கிலோ கஞ்சா இலை, 1.7 கிலோ Ecstasy, 800 கிராம் Ketamine, கஞ்சா கலந்த 2,400 ‘Puffs’ மற்றும் 30,000 யூரோக்கள் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைகள் Val-de-Marne, Hauts-de-Seine மற்றும் Essonne ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், இந்த போதைப்பொருள் விற்பனை வலையமைப்பு இணையதளத்தின் மூலம் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் கொள்முதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தனியான அழைப்பு மையமும் (centre d’appels) இயங்கி வந்ததுடன், பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இணையவழியாக விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வலையமைப்பின் பின்னணி மற்றும் கைது செய்யப்பட்ட 11 பேரின் பங்கு குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire