Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை அறிவிப்புகளை வெளியிடக்கூடாது: சபாநாயகர் கண்டிப்பு

சட்டசபை அறிவிப்புகளை வெளியிடக்கூடாது: சபாநாயகர் கண்டிப்பு

25 ஆவணி 2026 செவ்வாய் 07:47 | பார்வைகள் : 143


சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பேரவைக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். விதி 55, 56 போன்றவற்றின் கீழ் வழங்கப்படும் அறிவிப்புகளை சட்டசபை செயலாளரிடமோ அல்லது சட்டசபை தலைவரிடமோ அளிக்கும்போது, அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் அவற்றை பேரவையில் எடுத்துக்கொள்ளவும், விவாதிக்கவும் முடியும்.

ஆனால், சில உறுப்பினர்கள் தங்களது அறிவிப்புகளை எழுதி, உடனடியாக யூடியூப், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூற விரும்பவில்லை.

மேலும், உறுப்பினர்கள் தங்களது பெயர்களில் இயங்கி வரும் முகநூல் பக்கம், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கும் முன்பாக அவற்றை வெளியிடுவது பேரவை விதிகளுக்கு முரணானது.

இதுதொடர்பாக பேரவை விதி 36-ன் உட்பிரிவு 5 மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதன்படி, பேரவைத் தலைவர் அனுமதி அளித்து, சம்பந்தப்பட்ட அறிவிப்பை உறுப்பினருக்கு அனுப்பும் வரை, அதை அந்த உறுப்பினரோ அல்லது வேறு எவரோ வெளியிடக்கூடாது.

இன்று முதல் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பேரவை உறுப்பினர்கள் இதுபோன்ற அறிவிப்புகளை எழுதி வழங்கினால், அவற்றை பிரசுரிக்கவோ வெளியிடவோ கூடாது.

எனவே, அனைவரும் பேரவை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்