பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது பெருத்த ஏமாற்றம்: ஸ்டாலின்
25 ஆவணி 2026 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 145
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தமிழகத்தின் வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும், இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு, தமிழகத்தின் வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும். பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவது தமிழகத்தின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்.
அற்ப அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டு, அதுகுறித்து விவாதிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ வாய்ப்பளிக்காமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் தலைநகரில் உலகத் தரத்திலான விமான நிலையம் அமைவது மிகவும் அவசியமானது. அத்தகைய திட்டத்தை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றம் அல்ல; பெருத்த ஏமாற்றம்.
சாத்தியமான அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நிறைவடையும் நிலையில் இருந்தன. பல கட்டப் பணிகள் மற்றும் ஒப்புதல்கள் நிறைவடைந்திருந்த நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்குவதற்கான பல்வேறு திட்டங்களை வைத்திருந்தோம்.
ஆனால், தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகளைத் தொடங்குவதற்குள் தமிழகத்தின் வளர்ச்சியே ஒட்டுமொத்தமாக பின்னடைவைச் சந்திக்கும். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழகம், கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதல்வரின் இந்த அறிவிப்பு, நமது போட்டி மாநிலங்களுக்கு கிடைத்த ஜாக்பாட் போன்றதாகும்.
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு டிரில்லியன் டாலர், ஒன்றரை டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவது சாத்தியமில்லை. எந்தவிதமான யோசனைகளும், ஆலோசனைகளும் இல்லாமல் தவெக அரசு எடுத்துள்ள இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடியாக அமையும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire