Paristamil Navigation Paristamil advert login

3 குற்றவாளிகள் நாடு கடத்தல்: அமித் ஷா பாராட்டு

3 குற்றவாளிகள் நாடு கடத்தல்: அமித் ஷா பாராட்டு

25 ஆவணி 2026 செவ்வாய் 09:52 | பார்வைகள் : 124


பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வந்த அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆட்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டல், எல்லை தாண்டி ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தல், பஞ்சாபின் லூதியானாவில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய ஜஸ்ப்ரீத் சிங், அஜய் சிங் மற்றும் பவன்தீப் சிங் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.

அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், மலேசியாவில் தலைமறைவாக இருந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அமித்ஷா பாராட்டு

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மலேசியாவில் தலைமறைவாக இருந்து பிடிபட்ட மூன்று ரவுடிகளை இந்திய அமைப்புகள் தாயகத்திற்கு அழைத்து வந்து, போலீஸ் காவலில் ஒப்படைத்துள்ளன. அவர்கள் பாம்பியா குழுவைச் சேர்ந்தவர்கள். ஆட்கடத்தல், போதைமருந்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளது.

பாதுகாப்பான இந்தியா என்ற பிரதமர் மோடியின் கொள்கையின்படி, நமது அமைப்புகள் 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 51 குற்றவாளிகளை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்